Mnadu News

“பகாசுரன்” படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு! வரவேற்பை பெற்ற மன்சூர் அலிகான் நடனம்!

தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக படத்தின் மூலம் “பழைய வண்ணாரப்பேட்டை” அறிமுகமாகி சர்ச்சை இயக்குநராக வெற்றி நடை போட்டு வருபவர் மோகன் ஜி. முதல் படமே பெரிய அளவில் அவருக்கு லாபத்தை தரவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக இப்படத்தை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர்.

இவரின் இயக்கத்தில்அடுத்தடுத்து  வெளியான திரெளபதி, ருத்ரதாண்டவம் என கமர்சியல் கலந்து சமூகப் உணர்வோடு படங்களை கொடுத்தார். அது அவரை சாமானியன் வரை கொண்டு சேர்த்தது.

தற்போது, செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிகான் ஆகியோரை வைத்து “பகாசுரன்” என்ற படத்தை இயக்கி உள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர், முதல் சிங்கிள் யூடியூப் இல் ஹிட் அடித்து அசத்தியது. சாம் சி எஸ் இசையில் இன்று மாலை ” காதம்மா” என்ற பாடல் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோ நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இதில் மன்சூர் அலிகான் ஆடியுள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை கிளறி உள்ளது.

லிங்க் : https://youtu.be/TR2XAL5h-8Y

Share this post with your friends