பக்கவாதம் முடக்குவாதம் கண்டறிதல் மற்றும் தடுப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது. கருத்தரங்கில் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், கார்த்திக், சுரேஷ்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர்ராஜன், கதிரியக்க நிபுணர் ஜான் ராபர்ட், அப்போலோ மருத்துவமனை மதுரை பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி நீலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் குறித்து விளக்கி பேசினர்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர்கள் தெரிவித்ததாவது, ரத்தக்குழாய்கள் அடைப்பு பக்கவாதம் நிகழ்ந்த பிறகு ஒரு நிமிடத்திற்கு 19 லட்சம் நரம்புகள் செயல் இழந்து போகிறது .10 நிமிடத்தில் கிட்டத்தட்ட 2 கோடி நரம்புகளை செயலிழக்க வைத்து விடும். எனவே பக்கவாதத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர வேண்டும். சிகிச்சைக்கு பிறகும் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட கை, கால்களை பிசியோதெரபி மூலம் சரி செய்யலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.