Mnadu News

பசிக்க வேண்டுமா? இதை சாப்பிடுங்க

நம்ம உடம்ப குளிர்சாதனப்பெட்டி மாறி குளிர்ச்சியா வைப்பதற்கு இயற்கை அளித்திருக்கும் கொடை தான் வெந்தயம். கால்ஷியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்றவை அபரிமிதமாக இருப்பதால் வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கை நலமாக இருக்கும். மல்டி வைட்டமினுக்கு செலவுச் செய்யும் மாத்திரைகளுக்கு பதிலாக இந்த வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உரமாகும்.

இதுமட்டுமில்லாமல் உள்சூடு, வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு, ஜூரம், பித்தம், வாய்வு என பல பிரச்சினைகள் wஆலு கால் பாய்ச்சலில் ஓட மிகவும் நம்பகமானது வெந்தயம்.

பசி எடுக்க:

இளம் வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி ஒரு டீஸ்பூன் வெண்ணெயில் வதக்கி சாப்பிட, பித்த மயக்கம் தீரும். நல்ல பசி எடுக்கும்.

நீரிழுவு நோய் போக:

இரவில் படுக்கபோகுமுன் அரை டம்ளர் இளமோரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவிடுங்கள். மறுநாள் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும். இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

நாள்பட்ட வீக்கங்கள் குணமாக

வெந்தயத்தை ஊற வைத்து அம்மியில் வைத்து விழுதுபோல அரைத்துக் கொண்டு வாணலியிலிட்டு இலேசாகப் pஉரட்டி சூடு செய்யவும். வெதுவெதுப்பாக இருக்கும்போதே நாள்பட்ட வீக்கங்கள் மீது பூச வீக்கமும் வலியும் குறையும்.

தீப்புண்கள் ஆற:

சீமை அத்திப் பழத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கட்டிகள் மீது பூச விரைவில் பழுத்து uடையும் தீப்புண்களும் தன்மைக்கேற்ப ஆரும்.

தொண்டை ரணம் ஆற:

வெந்தயக்கீரையை நெய்யில் புரட்டிச் சாப்பிட தொண்டை ரணம் ஆறும். பேச்சாளர்கள், ஆசிரியர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டை பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லிடலாம்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கலால் வரும் மனச்சிக்கலை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. 100 கிராம் வெந்தயத்தை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். அந்தப்பொடியை தேனில் கலந்து சாப்பிட மலச்சிக்கலுக்கு சலாம் சொல்லி விடலாம்.

பித்தவெடிப்பா?

பெண்களுக்கு குதிகாலில் பித்தவெடிப்பு இருந்தால் வெந்தயச் சாறோடு சம அளவு ஆமணக்கு எண்ணெய் நல்லெண்ணெய் கலந்து வெடிப்புள்ள இடத்தில் 40 நாட்கள் தடவி வந்தால் வெடிப்புகள் மறைந்து இயல்பு நிலைக்கு பாதம் திரும்பும்.

Share this post with your friends