உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர் பகுதியின் 32 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் வயிற்று வலிக்கான மருந்துகள் சாப்பிட்டும் கொஞ்சம் கூட வலி குறையாததால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவர்கள் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏராளமான ஸ்பூன்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் விழி பிதுங்கி போயினர். மேலும், அந்த ஸ்பூன்களில் தலை, கைபிடிக்கும் பகுதிகள் மட்டுமே காணப்பட்டன.
இதையடுத்து அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவர்களிடம் கூறுகையில் “எனக்கு பசிக்கும் நேரங்களில் உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் இதனால் எனது பசி தீர்ந்தது என்றும், ஆனால் ஒரு கட்டத்தில் வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது” என கூலாக கூறியுள்ளார்.