கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை போன்று பஜ்ரங் தள் அமைப்பை நிச்சயம் தடை செய்வோம்’ எனப் கூறியிருந்தார்.பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ உடன் பஜ்ரங் தள் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பஞ்சாப் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த அவதூறு வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More