Mnadu News

படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரபலம்

ரெட்டைச்சுழி படத்தின் மூலம்  கதாநாயகனாக    அறிமுகமான   ஆரி  தனது பிறந்தநாளை நேற்று  படக்குழுவினருடன்   வித்தியாசமான முறையில்  கொண்டாடி   அனைவரையும் அசத்தியுள்ளார்.

Image result for ரெட்டைச்சுழி ஆரி

ஆரி  தற்போது  நடித்து கொண்டிருக்கும் படம்   அலேக்கா  . இந்த அலேக்கா  படத்தில் ஆரி ஜோடியாக  ஐஸ்வர்யா தத்   நடித்துள்ளார்  .

முழுக்க முழுக்க  காதல் கதையைக் கொண்டு இந்த படம்  உருவாகியுள்ளது . ஆரி  இயற்கை  உணவிற்கு  முன்னுரிமை  கொடுப்பவராக  இருப்பவராகவும் ,மேலும் இவர்  ஜல்லிக்கட்டு  போராட்டத்தின் போது  தன்னுடைய  பங்களிப்பையும்   அளித்திருந்தார்.

Image result for ஆரி பிறந்தநாள் விழா

சமூக மனப்பான்மை  அதிகம் கொண்ட  நடிகர்   ஆரியுடைய பிறந்தநாளை  நேற்று அலேகா படக்குழுவினர்  கொண்டாட ஒரு பிரம்மாண்ட 5  கிலோ  எடையுள்ள   கேக்கை தயார் செய்தனர்  . ஆனால் அதை ஏற்க மறுத்த  ஆரி  இயற்கை உணவிற்கு  முன்னுரிமை கொடுக்கவேண்டும்  என்றும் சொல்லும் விதமாக   தன்னுடைய பிறந்தநாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளநீர்  கொடுத்து  வித்தியாசமாக   பிறந்தநாளை  கொண்டாடி  அசத்தியுள்ளார்  என்பது குறிப்பிடத்தகுந்தது  .

Image result for ஆரி பிறந்தநாள் இளநீர்

தீடிரென ஏற்பாடு செய்த பிறந்த நாள் விழாவில் அவ்வளவு பேருக்கும் இளநீர் அங்கு உடனே கிடைத்தது எப்படி?  இதெல்லாம் சினிமா புரோமோஷன் சகஜமப்பான்னு போக வேண்டியது தான்.

Share this post with your friends