மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் வருவாய் துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர் பலியாகி இருக்கலாம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தில் இறந்தவர்களின் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு அங்கங்கே சிதறி கிடப்பதால் இறந்தது யார் என தெரியாமல் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More