மதுரை மாவட்டம் அழகுசிறை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்த நிலையில் மதுரை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More