Mnadu News

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஆலை உரிமையாளர் கைது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆலை வெடிவிபத்து சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாசு ஆலை உரிமையாளர் அணுசுயா தேவி, வெள்ளையன், பாண்டி ஆகிய 3 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் சிந்துபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆலை உரிமையாளர் அணுசுயா தேவியை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends