தீபாவளியையொட்டி திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்தில் பொதுமக்கள் , சிறு குழந்தைகளை கவரும் வகையில் பட்டாசு வடிவில் சாக்லேட்டுகளை தத்துரூபமாக தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது. இதில் சரவெடி, லட்சுமி வெடி, புஷ்வானம் , சங்கு சக்கரம் , அணுகுண்டு மத்தாப்பு என 11 வகையான பட்டாசு வகைகளைப் பயன்படுத்தி சாக்லேட்டை வடிவமைத்துள்ளனர் . இவைகள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிப்ட் பாக்ஸாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு போன்று அப்படியே சாக்லேட் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரியவர்களை விட பட்டாசு மீது அதிகம் விரும்பம் கொண்ட இளையோர்கள் , சிறு குழந்தைகளை இந்த பட்டாசு சாக்லேட்டுகள் வெகுவாக கவர்ந்துள்ளது .
இதனை தயாரித்த உணவு கலை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில் தீபாவளிப்பண்டிகையில் பட்டாசு முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவரும் விரும்புவதால் பட்டாசை மையமாக வைத்து இந்த சாக்லேட்டை மக்களின் பார்வையை கவரும் விதமாகவும் , அவர்களின் சுவைக்கு தகந்தார்போலும் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தீபாவளிப்பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு சாக்லேட் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.