தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேர கட்டுப்பாடு அறிவித்துள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மாங்காடு துணை அஞ்சலகத்தில் அதன் நிர்வாகிகள் இன்று ஈடுபட்டனர்.
இதையடுத்து பட்டாசு வெடிக்கும் நேரம் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாங்காட்டில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த நிர்வாகிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால்களை அனுப்பினர்.