Mnadu News

பட்டியலின சாதி சான்றிதழ்ழின் உண்மைத்தன்மை விவகாரம்:உயர்நீதிமன்றம் உத்தரவு.

1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சராக நியமிக்கப்பட்ட ஜெயராணி கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச்சான்று பெற்றிருந்தார். அதனை பணி நியமனத்தின் போது சமர்பித்தார். ஆனால்,பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் தந்த சாதி சான்றுக்கு பதில் தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை தர டிஎன்பிஎஸ்சி ஆணையிட்டது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயராணி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதி சான்றிதழ் செல்லத்தக்கது என்று உத்தரவிட்டதோடு, தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை தர டிஎன்பிஎஸ்சி ஆணையிட முடியாது என்றும் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

Share this post with your friends