Mnadu News

பட்டி தொட்டி எங்கும் “ஜெயிலர்” பட பாடல்கள்! நாளை ஆடியோ லாஞ்ச்!

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து முடித்துள்ள படம் “ஜெயிலர்”. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய “ஜெயிலர்” படத்தின் படப்பிடிப்பு 2023 ஜூன் மாதம் நிறைவடைந்தது. “ஜெயிலர்” இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மாஸ் ஹிட் அடித்தது. இதன் பின்னர் யாரும் எதிர்பாராத ரஜினி மாஸ்ஸை உணர்த்தும் பாடல் போல் வெளியானது “ஹுகும்”. இப்பாடல் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் பெரும் வரவேறப்பை பெற்று உள்ளது.

“ஹுகும்” பாடலே தீயை ஒலித்து கொண்டிருக்க, இதற்க்குள் அடுத்த பாடலான “ஜுஜுபி” படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. முற்றிலும் மாறுபட்ட குரல்களை பதிவு செய்து இந்த முறை அனிருத் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த நிலையில் நாளை ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் “ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதுவும் நான்கு வருடங்களுக்கு பிறகு என்பதால் “ஜெயிலர்” இன்னும் ஸ்பெஷல் படமாக மாறி உள்ளது.

Share this post with your friends