Mnadu News

பதவி ஏற்பு விழாவில் 144 முறை எழுந்து, உட்கார்ந்த குடியரசு தலைவர்

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவர் மாளிகையில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 144 முறை எழுந்து உட்கார்ந்தார். அதாவது ஒவ்வொருவரின் பதவிப்பிரமாணத்தின் தொடக்கத்திலும், பிறகு அவர்கள் கையெழுத்திட்டு வணக்கம் தெரிவிக்கும் போதும் குடியரசு தலைவர் எழுந்து, பின் உட்கார்ந்தார்.

இதைப்போல பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் 70 முறைக்கு மேல் எழுந்து உட்கார்ந்தனர். பதவி ஏற்ற அமைச்சர்கள், பதவி ஏற்று முடிந்ததும் பிரதமரின் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தபோது பிரதமரும், மற்ற 2 அமைச்சர்களும் எழுந்து நின்று பதில் வணக்கம் தெரிவித்தனர்.

Share this post with your friends