Mnadu News

பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் பலி : குடியரசுத் தலைவர் இரங்கல்.

பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் பலி : குடியரசுத் தலைவர் இரங்கல்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நேரு பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா – 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 41 பேர் சிக்கிக் கொண்டனர்;. இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது டுவிட்டரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தில் பனிச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் முழு வெற்றி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends