தற்போது சேவையில் இல்லாத தனது 25 விமானங்களை புதுப்பிக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, அரசின் அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறப்படும் என்றும் விமானங்களை புதுப்பிக்க ஏற்கெனவே 400 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங், சேவையில் இல்லாத விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் இது நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More