Mnadu News

பயோபிக்காக உருவாகும் இசைஞானியின் வாழக்கை வரலாறு!ஹீரோ இவரா ?

இசைஞானி இளையாராஜவின் வாழ்வியலை பயோபிக் படமாக உருவாக்க இயக்குனர் பால்கி திட்டமிட்டு அதை துவக்க உள்ளதாக கூறி உள்ளார். இது தான் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆம், பயோபிக் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் பலரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து உள்ளனர்.

அந்த வரிசையில் இசையில் பல வருடங்களாக தமிழ் சினிமா வுக்கும் இந்திய சினிமாவுக்கும், உலக அளவில் பிரபலமான இசைக் கடவுள் இளையராஜாவின் வாழக்கையை படமாக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அது தற்போது உறுதி ஆகி உள்ளது.

இதுகுறித்து பால்கி அளித்த பேட்டியில், “கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்துள்ளன. அந்த வகையில் இளையராஜாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. இளையராஜா மூன்று தலைமுறைகள் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தலைசிறந்த இசையமைப்பாளர் ஆவார். பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் இருக்கிறார். அவரது வாழ்க்கை படத்தை எடுத்தால் அதில் நடிக்க தனுஷ் பொருத்தமாக இருப்பார்.

திரையில் இளையராஜா ரோலில் தனுஷ் நடிப்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். இந்த படத்தில் தனுஷை நடிக்க வைப்பதுதான் அவருக்கு நான் கொடுக்கும் மிக சிறந்த பரிசாக இருக்கும். காரணம் என்னைப்போலவே தனுசும் இளையராஜாவின் தீவிர ரசிகர்” என்றார். இந்த செய்தி உலக அளவில் இருக்கும் இசைஞானி ஃபேன்ஸுக்கு ஆவலை கிளப்பி உள்ளது.

Share this post with your friends