Mnadu News

பரந்தூர் விமான நிலைய விவகாரம்:போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 13 கிராம மக்களின் போராட்ட குழுவினர், எட்டு பேர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு ஆகியோரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் கொண்டுவரப்பட்டால், எங்களது புவியியல் பாதிப்பு, விவசாயிகள் பாதிப்பு, பண்பாடு எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர்களிடம் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறினோம். இதையடுத்து, முதல் அமைச்சருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில், புதிய விமான நிலையத்துக்கு எதிராக 13 கிராம மக்கள் 80 நாள்களாக நடத்தி வரும் அனைத்து விதமான போராட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

Share this post with your friends