Mnadu News

பருப்பு,வெங்காயம் விலை உயராது : மத்திய அரசு உறுதி.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், நாட்டில் வெங்காயம் மற்றும் பருப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் என்று கூறி உள்ளார்.
43 லட்சம் டன் பருப்புகளும், 2 லட்சத்து 50 ஆயிரம்; டன் வெங்காயமும் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். தக்காளி விலை குறித்து ரோஹித், இது எளிதில் கெட்டுப்போகும் பொருள் என்பதால், அதன் விலை உள்ளூர் மதிப்பு உள்பட பல காரணிகளைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக தள்ளுபடி விலையில் இந்த மையம் பருப்பு வகைகளை வழங்குகிறது என்று செயலாளர் கூறி உள்ளார்..
பருப்பு விநியோகம் தொடர்பாக மாநிலங்களுடன் தொடர்ந்து கண்கானிப்பில் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

Share this post with your friends