ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சில பறவைக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. பறவைக் காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் கோழிக்கறியை அதிகம் சாப்பிடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கும் அவர், கோழிக்கறியை சரியாக சமைத்து சாப்பிட்டால் ஒன்றும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் உள்ள அரசு கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட சில பண்ணைகளில் மட்டும் கடந்த 5 நாள்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More