சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த சலீம் அலி மும்பையில் தனது மாமாவின் உதவியுடன் வளர்ந்து வந்தார். அறியாத வயதில் ஒரு நாள் விளையாட்டு துப்பாக்கியால் சிட்டு குருவியை சுட்ட போது அதில் இருந்த குண்டு வேகம் காரணமாக சிட்டு குருவியின் கழுத்தில் துளைத்ததால் அது சுருண்டு விழுந்து இறந்தது. செய்வதறியாது திகைத்த அவரால் அதிலிருந்து நீண்ட நாள் மீண்டு வர முடியாமல் திகைத்துள்ளார். அதன் பிறகு இயற்கை வரலாற்று கழகத்தின் கவுரவ செயலாளர் மில்லர்டு என்பவரை சந்திக்கிறார். அவரின் மூலம் பறவைகளை பற்றியும் பறவைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் அறிந்து கொள்கிறார்.
பின்பு கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் அண்ணனின் தொழிலுக்கு உதவ பர்மா சென்றார். 1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெஹ்மினா என்பவரை திருமணம் செய்துகொண்டு சிறிது காலம் பர்மாவிலே வாழ்ந்தனர். அப்போது வேலை இழந்து தவித்த சலீம் அலிக்கு தெஹ்மினா உறுதுணையாக இருந்தார். மனம் சோர்ந்து வீட்டுத்தோட்டத்தின் மரத்தடியில் அமரும்போது பறவைகளை நோட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவருக்கு பறவைகள் பற்றி மட்டுமே நிறைய சிந்தனை வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். அது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து 1932 இல் கேரள பறவைகள் என்ற நூலையும் 1942 ஆம் ஆண்டு இந்திய பறவைகள் என்ற நூலையும் வெளியிட்டார். இதற்கிடையில் பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு ஒன்று இவரால் வெளியிடப்பட்டது.
இவரது முயற்சியை பாராட்டும் நோக்கில் இவருக்கு பிரித்தானிய பறவையியல் கழகத்தின் மூலம் பத்ம பூஷன் விருது 1958 ஆம் ஆண்டிலும், ஜோன் சி பிலிப்ஸ் விருது 1969 ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. தன் வாழ்நாளை பறவைகளுக்காக ஒதுக்கிய இவரின் செயலை பாராட்டி உலகெமெங்கிலும் இருந்து இவருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவர் “இந்தியாவின் பறவை மனிதர்” என்று அழைக்கப்பட்டார்.
இந்திய அரசியல் அவருடைய மறைவுக்கு பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை நிறுவியது. அதுமட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பறவைகள் காட்டுயிர் சரணாலயங்களுக்கு சலீம் அலியின் பெயரை சூட்டி கவுரவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய மாமேதை சலீம் மொய்சுதீன் அப்துல் அலி ஜூன் மாதம் 1987 இல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
ஆம் நவம்பர் 12 இன்று பறவை மனிதன் அப்துல் அலியின் பிறந்தநாள்