Mnadu News

மாணவர்களை வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடுத்த கூடாது: அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவுரை.

தஞ்சையில் இன்று முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். நான் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை கொண்டு வருகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. பள்ளிகளில் மாணவ-மாணவிகளை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்த கூடாது. அதனையும் மீறி ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதேப்போல் தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று கூறினார்.

Share this post with your friends