Mnadu News

பள்ளிக்கூடத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு: 8 மாணவர்கள் உயிரிழப்பு.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.அதோடு,ஒரு ஆசிரியர், 6 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கேகே என்ற மாணவனை கைது செய்தனர்.

Share this post with your friends