திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி விடுதி மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வருவாய் துறையினர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டோர் மேற்கொண்ட விசாரணையில் மூன்றாவது மாடியில் தடுப்பு சுவருடன் கூடிய கிரில் தடுப்பு கம்பிகள் 3 அடி உயரம் மட்டுமே உள்ளதால் மாணவி தவறி விழுந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாணவியிடமும் அவரது பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More