Mnadu News

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பாத்கேலா இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 9 பேரை சரமாரியாக சுட்டக் கொன்றனர்.இந்த தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஆறு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு பட்கெலா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Share this post with your friends