பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காமில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த திடீர்; நிலச்சரிவுடன்; மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.அதே சமயம்,இந்த நிலச்சரிவுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.அதோடு, சுமார் 60 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரம்,இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More