பாகிஸ்தானில் கொட்டி வரும் பருவ மழையால் அம் நாடே ஸ்தம்பித்து போயுள்ளது. பல சாலைகள், பாலங்கள் உடைந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கபடுள்ளனர். பல்வேறு நோய்கள், பாம்பு கடி, நாய் கடி போன்ற பாதிப்புகளில் பலர் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 2000 இற்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட பாகிஸ்தான் எதிர்பார்த்து உள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த கடினமான சூழலில் மனிதநேய அடிப்படையிலான இந்த ஆண்டிற்கான நிதி உதவியாக ரூ.459.56 கோடி அமெரிக்கா ஒதுக்கி உள்ளது. இதுதவிர, ரூ.81.34 கோடி உணவு பாதுகாப்பு உதவி தொகையாகவும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவித்து உள்ளது.