Mnadu News

பாகிஸ்தானுக்கு வழங்கிய நிதியில் ஊழல்! கடும் கோபத்தில் அமெரிக்கா!

பாகிஸ்தான் நாட்டை புரட்டி எடுத்த கனமழை மற்றும் பெருவெள்ளத்துக்கு
1700 பேர் பலியாகியுள்ளனர். இதில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சுமார் 80 லட்சம் பேர் புலம் பெயர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். 24 ஆயிரம் பள்ளிகள் சேதமடைந்து உள்ளன.

இந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு மனிதநேய அடிப்படையில் 4,600 கோடிகளை அமெரிக்கா உதவி செய்தது. அதோடு உணவு பாதுகாப்பு நிதியாக 83 கோடிகளை தனியாக வழங்கியது.

இந்நிலையில், தான் வெள்ள நிவாரண நிதியில் ஊழல் நடைபெற்று உள்ளது என்கிற செய்தி அமெரிக்காவை கொதிக்க செய்துள்ளது.

இந்நிலையில், நிதியை சரியாக நிர்வகிப்பது, மக்களை சென்று சேர்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணிக்க அமெரிக்க குழு உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் என கூறிய அவர், இந்த குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், வெள்ளம் பாதித்த சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கூடுதலான மாவட்டங்களுக்கு நேரில் சென்று சுற்றி பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்து உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends