இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், அதிகாலை 4.35 மணிக்கு டிரோன் ஒன்று பறந்து வருவதைக் கண்டறிந்தனர். உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தியதோடு, டிரோன் விழுந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த டிரோனில் என்ன கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தேடப்பட்டு வருகிறது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் 191 டிரோன்கள் பறந்து வந்திருப்பதாகக் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்பு மீதான கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More