இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் பாஜகவில் இணைவார் என்று சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இது புரளியாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதை உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அருண் ஜெட்லி முன்னிலையில் கவுதம் கம்பீர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.