பாஜக அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது . என தெரிவித்தார் பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். திலிப் கண்ணன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார்,எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் ,பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கலாம்.பாஜக அணைத்து மாவட்டங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த...
Read More