Mnadu News

பாஜக எம்எல்ஏ மகன் கைது: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்.

கர்நாடகம் மாநிலம், தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாதல். இவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயன பொருள்கள் வாங்குவது தொடர்பாக டெண்ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பல ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.இந்த நிலையில் ஒரு ஒப்பந்ததாருக்கு டெண்டர் வழங்க தலைமை கணக்கு அதிகாரியான பிரசாந்த் மாதல் ரூ.81 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரும் சம்மதம் தெரிவித்ததாகவும், வியாழக்கிழமை மாலை முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை கொடுப்பதாக அந்த அந்த ஒப்பந்ததாரரிடம் கிரென்ட் சாலையில் உள்ள தன்னுடைய தந்தையின் அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் மாதல் கூறியுள்ளார். இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா அலுவலகத்தில் வியாழக்கிழமை லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் என கட்டு கட்டாக இருந்த ரூ.40 லட்சம் உள்பட ரூ.1.7 கோடியை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், தலைமை கணக்கு அதிகாரி பிரசாந்த் மாதலையும் கைது செய்தனர். இந்நிலையில், லஞ்சம் வாங்கிய புகாரில் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this post with your friends