Mnadu News

பா.ஜனதாவில் சேரவில்லை என்றால் கைது செய்யப்படுவேன்; அதிஷி

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் அமைச்சருமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் என பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:- எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன். மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends