மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, பா.ஜ.க, உடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.இந்த நிலையில், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரான அஜித்பவார், பா.ஜ.க, உடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதனை அஜித்பவார் மறுத்தாலும், அதற்கான பேச்சுவார்த்தை நிலவுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே,செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷிர்ஷத், சிவசேனா மற்றும் பா.ஜ.,வின் கொள்கைகளை அஜித்பவார் ஏற்றுக்கொண்டால் வரவேற்போம். ஆனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தால், ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, மஹாராஷ்டிர அரசில் அங்கம் வகிக்காமல் வெளியேறுவோம் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More