Mnadu News

பிஎஸ்எல்வி சி55 ராக்கெட் ஏப்.,22ஆம் தேதி மதியம் 2.19 மணிக்கு ஏவப்படுகிறது.

நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அதனுடன் வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.அந்த வகையில் சிங்கபூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீPஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டது.,இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் ‘சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது. எஸ்எல்வி சி55 ராக்கெட் வரும் ஏப்.,22ஆம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends