காற்று மாசை குறைக்கும் வகையில் பிஎஸ்-6 ரக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 1,666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனை, பல்லவன் இல்லம், பல்லவன் சாலையில் 100 பிஎஸ்-6 பேருந்துகளை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.