Mnadu News

பிஒய்டி காரின் முன்பதிவு துவங்கியது.

வாகன எரிவாயுவின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் படியான வாகனத்தை பல நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் வளர்ந்து வரும் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி நேற்று மின்சாரத்தில் இயங்கும் அட்டோ 3 வகை காரின் விற்பனை முன்பதிவை துவங்கி உள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் அட்டோ 3 காரினை முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதோடு;, இந்தக் காரில் 7 ஏர் பேக்கள், 60 புள்ளி 48 கிலோ வாட் பேட்டரி, 360 டிகிரி வியூ மானிடர் உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.
இதன் முன்பதிவு தொகை 50 ஆயிரமாக ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2023 ஆண்டு ஜனவரிக்குள் முதல் 500 கார்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அந்நிறுவம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends