பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்து உள்ளனர். எனவே நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் – 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More