Mnadu News

பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வீடியோ வெளியீடு! தொடரும் தமனின் இசை சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது அவர் அடுத்தடுத்த நகர்வுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார். நடிப்பது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல்வேறு கட்டங்களில் அவர் தன்னை நகர்த்தி கொண்டு செல்கிறார்.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் SK தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் “பிரின்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் SK வின் ஜோடியாக மரியா ரபோஷக்கா என்ற உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார். அதே போல சத்யராஜ், பிரேம்ஜியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் “பிம்பிலிக்கி பிலாப்பி” மற்றும் ஜெசிக்கா போன்ற பாடல்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்களை மேலும் பரவசமாக்க நினைத்த படக்குழு தற்போது பிம்பிலிக்கி பிலாப்பி புரோமோ வீடியோவை வெளியிட்டு உள்ளது. யூடியூப் ஐ கலக்கி வருகிறது இந்த வீடியோ பாடல். சதீஷ் இன் துள்ளல் நடன அமைப்பும், விவேக் இன் கேட்சி வரிகளும், அனிருதின் மயக்கும் குரலும், தமனின் டான்ஸ் வரிசை பாடல்களில் இதையும் இணைத்துள்ளது.

பாடல் லிங்க் : https://youtu.be/NQ2J7q3Vl5I

Share this post with your friends