2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 25 பேருக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னீஸ் வீரர் சரத் கமலுக்கு ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மிண்டனில் லக்ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More