பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கௌரவ் திவேதி நியமிக்கப்படடுள்ளார். சத்தீஸ்கரின் 1995 ஆம் ஆண்டு பிரிவு அதிகாரியான திவேதி, பொறுப்பேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்துக்கு அப்பதவியில் இருப்பார். முன்னதாக, கௌரவ் திவேதி MyGovIndia என்ற அரசு இணையத்தளத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். கடந்த 2017 ஆண்டு முதல் 2022 வரை சசி சேகர் வேம்படி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்த நிலையில், தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனரல் மயங்க் அகர்வாலுக்கு இந்தாண்டு ஜூன் மாதம் பிரசார் பாரதியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More