Mnadu News

பிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ஜாலியாக ரசித்த ஆஸ்திரேலிய பிரதமர்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் அமைச்சர்கள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் சில தினங்களுக்கு முன் துவங்கியது. அதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மார்ச் 09) காலை 9.30 மணிக்கு துவங்கியது.இதில் ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள், இரு அணியின் கேப்டன்கள் உடன் கை கோர்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 75வது ஆண்டு நல்லுறவை குறிக்கும் விதமாக இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை ஜாலியாக கண்டு ரசித்தனர்.
செல்வம் அமரக் கூறினார். ஆனால் அவர் நெடுநேரம் நின்றிருந்தார். பின்னர் பேரவையிலிருந்து எம்எல்ஏ நேரு வெளி நடப்பு செய்தார்.

Share this post with your friends