குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 24 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் நிலையில், நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் மோத தயார் நிலையில் உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது போன்று, குஜராத்திலும் அதிகாரத்திற்கு வருவதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் வரும் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில்; சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர், ஜுகநாத், ராஜ்கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த சுற்றுப்பயணத்தின் போது 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More