Mnadu News

பிரதமர் மோடி குறித்து ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்று 45 நிமிட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதின் இந்தியில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான் என்று  ரஷியா அதிபர் புதின்  அந்த வீடியோவில் கூறியுள்ளார்.  இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தன. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கூடாது என வலியுறுத்தின. ஆனால், இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.  இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி  என்று புதின் தெரிவித்தார்.

Share this post with your friends