மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலும், பிரச்சாரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து திமுக கூட்டணியில் தொகுதிகளை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது திரைப்படங்களில் கருத்து கூறும் இயக்குநர் பா.ரஞ்சித், ஜாதிக்கட்சி தலைவருக்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பதை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.