Mnadu News

பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினர்:பிரதமர் மோடி அஞ்சலி.

குஜராத் – ராஜஸ்தான் எல்லையில் உள்ள மான்காரில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியினர் மற்றும் வனவாசிகள்; ஒன்றுகூடியதற்கு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமை தாங்கினார். அதையடுத்து, கடந்த 1913- ஆம் ஆண்டு; பிரிட்டிஷ் ராணுவத்தால் சுமார்; ஆயிரத்து 500 பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு; உயிரிழந்தவர்களுக்கு மான்காரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு அவர் ,பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கார் தாமில் ஆதிவாசிகள் மற்றும் பிற பழங்குடியினரின் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் முதல் அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Share this post with your friends