சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், ஆனந்தராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் தமன் இசையில் உருவாகி இன்னும் இரண்டு நாட்களில் உலகமெங்கும் வெளியாக உள்ள படம் தான் “பிரின்ஸ்”.
தமன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் கதை கரு கசிந்துள்ளது. கடலூர் இளைஞருக்கும், புதுச்சேரி யுவதிக்கும் இடையில் நிகழும் காதலே படத்தின் கதை.
ஏற்கனவே, 100 கோடிகளை படம் பிரீ ரீலீஸ்லிலேயே வசூல் செய்து விட்ட நிலையில், தற்போது வெளியாகி வசூலாகும் பணம் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடுத்த வருடம் அயலான், மாவீரன் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.