இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் SK தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் “பிரின்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் SK வின் ஜோடியாக மரியா ரபோஷக்கா என்ற உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார். அதே போல சத்யராஜ், பிரேம்ஜியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டு பாடல்களும், டிரெய்லரும் இணையத்தை கலக்கும் நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான “வூ அம் ஐ” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை தமன் இசையில் அறிவு எழுதி பாடியுள்ளார். இப்படம் 21 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
லிங்க் : https://youtu.be/7MW8OqrdxZ8