ரொமாண்டிக் காமெடி படங்கள் எப்போது வந்தாலும் அவை ரசிகர்களுக்கு அலுப்பு தட்டாத ஒன்றாகவே இருக்கும்.
அப்படி தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் தமன் இசையில் சிவா, மரியா ரபோஷக்கா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகி உள்ள படம் தான் “பிரின்ஸ்”.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இப்படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை மக்களிடம் பெற்றுள்ளது. ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் காதல் கதையே “பிரின்ஸ்”.

தமன் இசையில் பாடல்கள் நன்றாக வந்து இருந்தாலும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளது என்றே சொல்ல வேண்டும். குடும்பமாக ஒரு முறை பார்க்கும் படமாகவே பிரின்ஸ் உள்ளது என்பது பரவலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
