சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது அவர் அடுத்தடுத்த நகர்வுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார். நடிப்பது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல்வேறு கட்டங்கபிரின்ஸ் ரீலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி! ளில் அவர் தன்னை நகர்த்தி கொண்டு செல்கிறார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/Screenshot_436-1200x737-1-1024x629.jpg)
தற்போது, இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “பிரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். இவர்களோடு, இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் ஏற்கனவே இதன் பாடல்கள் வைரல் ஆகியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/untitled-design-18-2-16548436694x3-2-1024x768.jpg)
தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், படம் அக்டோபர் 21 அன்றே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பே படம் வெளியாவதால் சிவா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/MV5BMWY1MjEzZWItNjZiOC00YzY4LWJiMjgtMTU4MDczYWExYzIwXkEyXkFqcGdeQXVyMTEzNzg0Mjkx._V1_-1-768x1024.jpg)